2010-11-09 15:53:26

150 உதவி அமைப்புகளின் பணிகளை தடை செய்வதுள்ளது ஆஃப்கான் அரசு.


நவ 09, 2010. தங்கள் திட்டங்கள் மற்றும் நிதிநிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறியதற்காக நான்கு சர்வதேச நிறுவனங்கள் உட்பட 150 உதவி அமைப்புகளின் பணிகளைத் தடை செய்வதாக இச்செவ்வாயன்று அறிவித்தது ஆஃப்கான் அரசு.

கடந்த இரண்டாண்டுகளாக அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கத் தவறியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் ஆஃப்கானிஸ்தானின் பொருளாதார அமைச்சககத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர்.

ஒவ்வோர் ஆறு மாதமும் தங்கள் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து உதவி நிறுவனங்கள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆணை அமுலில் இருக்கின்ற போதிலும், ஏற்கனவே இவைகளுக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஆஃப்கான் நாட்டில் 360 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 1300 அரசு சாரா அமைப்புகள் பணியாற்றி வந்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.