2010-11-07 13:08:05

நவம்பர் 08, நாளுமொரு நல்லெண்ணம்


"வால் விண்மீனுடன் பிறந்தேன். வால் விண்மீனுடன் போக விழைகிறேன்." என்று சொன்னவர் புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் (Mark Twain). 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை விண்ணில் நம் பார்வையில் தோன்றும் Halley என்ற விண்மீன் தோன்றிய 1835ம் ஆண்டு மார்க் ட்வெய்ன் பிறந்தார். 1909ம் ஆண்டு தனது 74வது வயதில் அவர் தன் நண்பரிடம் சொன்னது இதுதான்: "நான் Halley விண்மீனுடன் இவ்வுலகிற்கு வந்தேன். அடுத்த ஆண்டு அது மீண்டும் வரும் போது நானும் உலகைவிட்டுச் செல்ல விழைகிறேன்." 1910ம் ஆண்டு Halley மீண்டும் தோன்றியது. மார்க் ட்வெய்ன் உலகைவிட்டு விடைபெற்றார். இவ்வாண்டு அவர் இறந்ததன் நூற்றாண்டு நினைவு.
Halley வால் விண்மீன் 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை விண்ணில் தன் முத்திரையைப் பதித்துச் செல்வது போல், மார்க் ட்வெய்ன்ம் உலக வரலாற்றில் தன் முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளார். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உலக வரலாற்றில் தன் முத்திரையைப் பதிக்க வேண்டும்.
Halley வால் விண்மீன் 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கருகில் வருவதால் நம் கண்களுக்குத் தெரியும் என்று அவ்விண்மீனின் பாதையைத் தீர்மானித்த Edmond Halley 1656ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறந்தார். Halley விண்மீன் இறுதியாக நம் பூமிக்கருகே வந்தது 1986ம் ஆண்டு. மீண்டும் அது 2061ம் ஆண்டு பூமியை நெருங்கி வரும்.







All the contents on this site are copyrighted ©.