2010-11-06 15:20:29

நவம்பர் 07, நாளுமொரு நல்லெண்ணம்


நவம்பர் 7ம் தேதி புற்று நோயைக் கட்டுப்படுத்தும் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த மேரி க்யூரி அம்மையார் பிறந்த நாள். புற்று நோய் கண்டவர்களில் பலர் இந்த உலகை அழகான உலகமாய் மாற்றியுள்ளனர். 1961ம் ஆண்டு புதுடில்லிக்கருகே மீரட்டில் பிறந்த இளம்பெண் கீதாஞ்சலி (Gitanjali Ghei) 16 வயதிலேயே புற்றுநோய்க்குப் பலியாகி இவ்வுலகை விட்டுச் சென்றாலும், தன் கவிதைகள் மூலம் இன்னும் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். ‘புறப்பாடு’ (THE DEPARTURE) என்ற தலைப்பில் அவர் எழுதிய ஓர் அழகிய கவிதை இது:
நேரம் வரும் போது, வாழ்வே, நான் உன்னிடமிருந்து தயக்கத்தோடு விடை பெறுவேன்.
வேறு வழி எதுவும் உள்ளதோ... தெரியவில்லை.
ஆனால், அடிக்கடி நான் எண்ணியதுண்டு.
இந்தப் பிரிவால் யாருக்கு இழப்பு?
இறக்கும் எனக்கு இழப்பா?
அல்லது என்னை இழப்பதால் முழுமை அடைய முடியாத
வாழ்வே, உனக்கு இழப்பா?







All the contents on this site are copyrighted ©.