2010-11-05 15:26:57

பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து பிலிப்பைன்ஸ் ஆயர்கள் எச்சரிக்கை


நவ.05,2010. பிலிப்பைன்ஸ்க்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்று பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதையடுத்து தென் பிலிப்பைன்ஸ் ஆயர்களும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசுவாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நடவடிக்கை குறித்துப் பங்கு குருக்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள கோட்டாபாட்டோ உயர்மறைமாவட்ட துணை ஆயர் ஹோசே பாகாஃபோரோ, ஒவ்வொரு குருவும் தனது பங்கைச் சேர்ந்த பகுதிகளில் சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளைக் கண்டறிந்தால் அவற்றை உடனே அறிவிப்பதற்கு “உள்துறை பாதுகாப்பு” என்ற அமைப்பை உருவாக்குமாறு கேட்டுள்ளார்.

சிகிச்சையைவிட தடுப்பு நடவடிக்கை நல்லது என்றும் அவ்வாயர் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்று அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், கானடா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.