2010-11-05 15:28:49

உலகளாவிய வளர்ச்சியில் ஏழை நாடுகளும் பங்கெடுத்துள்ளன, ஐ.நா.அறிக்கை


நவ.05,2010. நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் கடும் சமத்துவமின்மைகள் காணப்பட்டாலும், அண்மைப் பத்தாண்டுகளில் பெரும்பாலான வளரும் நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன என்று ஐ.நா.வளர்ச்சித்திட்ட அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.

UNDP என்ற இவ்வமைப்பு வெளியிட்ட மனித முன்னேற்றம் குறித்த அறிக்கை, நலவாழ்வு, கல்வி, வருவாய் வழங்கும் வழிகள் போன்றவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் 1970ல் 59 ஆண்டுகளாக இருந்த மனிதனின் சராசரி ஆயுட்காலம் 2010ம் ஆண்டில் 70 ஆண்டுகளை எட்டியுள்ளதாகவும், ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகளுக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கை 55 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்ந்துள்ளது எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டும் முதல் பத்து நாடுகளில் ஓமன், நேபாளம், லாவோஸ் ஆகியவையும் முதல் இருபது நாடுகளில் எத்தியோப்பியா, கம்போடியா, பெனின் ஆகியவையும் உள்ளன என்று இவ்வறிக்கையைத் தயாரித்த ஜெனி குலுக்மான் கூறினார்







All the contents on this site are copyrighted ©.