2010-11-04 15:33:57

வத்திக்கான் வானொலி நேயர்கள் எல்லாருக்கும் எமது தீபஒளி விழா நல்வாழ்த்துக்கள்.

நவம்பர் 05 நாளும் ஒரு நல்லெண்ணம்


எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள். வருடத்தில் பல விழாக்கள் வந்து போகின்றன. இந்த விழா நாட்களில் சிலர் இன்புற்றிருக்க சிலர் துன்புற்று வாடுகின்றனர். சிலர் புத்தாடை கட்டி விழாக் கொண்டாட சிலர் ஆடையின்றி அலைகின்றனர். வாழ்க்கையில் எத்தனையோ பேருக்கு எத்தனையோ உதவிகளைச் செய்கிறோம். ஆனால் காலத்தால் செய்யும் உதவிதான் ஆயுள் உள்ளவரை நினைவுகூரப்படும். ரூட்யார்ட் கிப்ளிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளருக்கு முதல் குழந்தை பிறந்தது. அவரது குடும்பம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த தாதிக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுக்க நினைத்தார் ரூட்யார்ட். அச்சமயத்தில் தான் எழுதி முடித்திருந்த, ஆனால் அதுவரை வெளிவராத நாவலின் கையெழுத்துப் பிரதியைப் பரிசாகக் கொடுத்தார். அந்தத் தாதியிடம், இந்தப் பிரதி உனது துன்ப காலத்தில் உனக்குக் கைகொடுக்கும் என்றும் சொன்னார். உண்மையிலேயே அது கை கொடுத்தது. எப்படியெனில், அப்பெண் தனது கஷ்ட காலத்தில் அதனை விற்றுப் பெரும் பணம் பெற்றார்.

ஆம். நல்ல எண்ணத்தோடு செய்யும் சிறு உதவியும் விலைமதிப்பு மிக்கதாக அமையும்







All the contents on this site are copyrighted ©.