2010-11-03 15:40:24

கீழைரீதி கத்தோலிக்கத் திருச்சபைகளின் 13வது கூட்டம்


நவ.03,2010. பல்கேரிய நாட்டு ஸ்லாவிய பைஜான்ட்டைன் ரீதி கத்தோலிக்கத் திருச்சபை, உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒன்றிணைந்ததன் 150ம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, சோஃபியா நகரில் இவ்வியாழனன்று நான்கு நாள் கூட்டம் ஒன்று தொடங்குகிறது.
ஐரோப்பாவின் கீழைரீதி கத்தோலிக்கத் திருச்சபைகளின் 13வது கூட்டமாகவும் அமையும் இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் 13 கீழைரீதி கத்தோலிக்கத் திருச்சபைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
“கீழைரீதி திருச்சபைகளின் அடிப்படைத் தத்துவங்களும் இன்றையத் திருச்சபையின் உண்மைத்தன்மையும்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஒளியில் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தாடாக்ஸ் திருச்சபைகளுக்கு இடையேயான உரையாடல் பற்றி விவாதிக்கப்படும்.திருப்பீடக் குடியேற்றதாரர் அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Vegliò இக்கூட்டத்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றுவார்.







All the contents on this site are copyrighted ©.