2010-11-03 15:41:34

ஒரிசாவில் பாலியல் வன்முறைக்கு ஆளான அருள்சகோதரி தன்னைத் தாக்கியவர்களை நீதி மன்றத்தில் அடையாளம் காட்டினார்


நவ.03,2010. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளின் போது, பாலியல் வன்முறைக்கு ஆளான அருள்சகோதரி மீனா, தன்னைத் தாக்கியவர்களை நீதி மன்றத்தில் இப்புதனன்று அடையாளம் காட்டினார்.
கட்டக் நீதிமன்றத்தில் இப்புதன் காலை 90 நிமிடங்கள் பேசிய அருள்சகோதரி மீனா, தன்னை வன்முறைக்கு உள்ளாக்கிய சந்தோஷ் பட்நாயக்கையும், வேறு ஐவரையும் குறித்து விவரங்களைக் கூறினார்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடத்தப்பட்ட இந்த வன்முறை சம்பவத்தின் விவரங்களை அருள்சகோதரி கூறிய போது, பொங்கி வந்த கண்ணீரைப் பல முறை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.
கந்தமால் வன்முறைகள் தொடர்பாக மேலும் 12 பேருக்கு அண்மையில் தண்டனைகள் வழங்கப்பட்டு, 46 பேருக்கு விடுதலை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இந்து மதத்தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒரிசாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர், 350 கோவில்கள் சேதமாக்கப்பட்டன, 5000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டு 50,000க்கும் மேற்பட்டோர் தங்குமிடங்களை இழந்தனர்.இவ்வன்முறை குறித்த வழக்குகளில் தற்போது 21 பேருக்கு நீதிமன்றங்கள் வழி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.