2010-11-03 15:41:15

இங்கிலாந்தில் உள்ள ஓர் அருள்சகோதரிக்குத் திருத்தந்தையின் அரிய விருது


நவ.03,2010. திருத்தந்தையால் வெகு அரிதாக வழங்கப்படும் 'திருச்சபைக்கும் பாப்பிறைக்கும்' (Holy Cross Pro Ecclesia et Pontifice) என்ற விருதினை இங்கிலாந்தில் உள்ள ஓர் அருள்சகோதரி அண்மையில் பெற்றுள்ளார்.
இயேசுவின் திரு உடலின் கார்மேல் சபையைச் சேர்ந்த தெரேசா ஜோசெப் பேகஸ் (Pegus) என்ற அருள்சகோதரி இளையோர் மத்தியில் செய்து வந்த பணிகளை மதித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அருள்சகோதரி தெரேசா ஜோசப் பிரித்தானியப் பேரரசின் உறுப்பினர் (Member of the British Empire - MBE) என்ற அரசின் உயரிய விருதை 2008ம் ஆண்டு இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்திடமிருந்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.சகோதரி தெரேசா ஜோசப் தற்போது உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் இருப்பதால், பாப்பிறை வழங்கியுள்ள இந்த விருதைப் பெறும் விழா விரைவில் நடத்தப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.