2010-11-02 15:38:08

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட வழக்கில் 12 பேருக்கு தண்டனை


நவ 02, 2010. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட வழக்கில் தற்போது 12 பேருக்கு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளன கந்தமால் மாவட்ட நீதிமன்றங்கள்.

கிறிஸ்தவர்களின் வீடுகள் தாக்கப்பட்டது மற்றும் கொலை தொடர்புடைய வழக்குகளில் 12 பேருக்கு தண்டனை வழங்கியுள்ள வெவ்வேறு நீதிமன்றங்கள், போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் 46 பேரை விடுதலையும் செய்துள்ளன.

2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந்தேதி இந்து மதத்தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தபட்சம் 93பேர் கொல்லப்பட்டனர், 350 கோவில்கள் சேதமாக்கப்பட்டன, 5000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டு 50,000க்கும் மேற்பட்டோர் தங்குமிடங்களை இழந்தனர். இவ்வன்முறை குறித்த வழக்குகளில் தற்போது 21 பேருக்கு நீதிமன்றங்கள் வழி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.