2010-11-01 15:27:17

உரோமையில் 3000க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்ட 'புனிதர்கள் ஓட்டம்'


நவம்பர் 1, 2010 - 3000க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்ட 'புனிதர்கள் ஓட்டம்' இத்திங்கள் காலை உரோமையில் இடம் பெற்றது.

அனைத்துப் புனிதர்கள் நாளான நவம்பர் முதல் தேதியைக் கொண்டாடும் விதமாகவும், இளையோரைப் பொருள் நிறைந்த ஓட்டப்பந்தயங்களில் ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் கடந்த மூன்று ஆண்டுகளாக 'புனிதர்கள் ஓட்டம்' நடத்தப்படுகிறது.

உரோமையில் உள்ள அனைத்து துரவறத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஓட்டத்தால் திரட்டப்படும் நிதி, உலகின் பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று கூறிய தொன் போஸ்கோ உலக நிறுவனத்தின் தலைவரான அருள்தந்தை Orlando Dalle Pezze, இவ்வாண்டு இத்தொகையானது பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடையும் என்று தெரிவித்தார்.

இவ்வாண்டு நடத்தப்பட்ட இந்த 'புனிதர்கள் ஓட்டத்'தில் 150,000 யூரோக்கள் திரட்டப்பட்டுளதெனத் தெரிகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் இவ்வோட்டத்தில் திரட்டப்பட்ட தொகை இலங்கையில் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிறார் படைவீரர்களின் மறு வாழ்வுக்காக அளிக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.