2010-10-30 16:58:09

அக்டோபர் 31, நாளுமொரு நல்லெண்ணம்


40 ஆண்டுகளுக்கும் மேலாக இயேசுசபையினர் இஸ்பெயினில் மயோர்க்கா (Majorca) என்ற ஊரில் நடத்தி வந்த ஒரு கல்லூரியின் வாயில் காப்பவராகப் பணியாற்றிய இயேசு சபை அருட்சகோதரர் புனித அல்போன்ஸ் ரொட்ரிகுவஸ் 1617, அக்டோபர் 31 இறையடி சேர்ந்தார். இப்புனிதரைக் குறித்து இயேசு சபைக் குருவும், கவிஞருமான Gerard Manley Hopkins என்பவர் எழுதிய கவிதையைத் தழுவி எழுந்த எண்ணங்கள் இவை:

எக்காளம் எட்டுத் திக்கும் முழங்க, வாளெடுத்துப் போர் புரிவதை வீரம் என்கிறோம்.
எக்காளமும், எதிரிகளும், எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல்,
உள் மனதில் உண்டாகும் போர்களில் வெற்றி பெற்றவர்களைப் பற்றி
இவ்வுலக வரலாறு பேசாது.
மறு உலகில் இவர்கள் வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
பரபரப்பாய் ஓடும் பலரது வாழ்க்கையின் மத்தியில்
மயோர்க்கா (Majorca) என்ற ஊரில்,
பல ஆண்டுகள் வாசல் கதவைக் காத்து வந்த,
இயேசுவின் வருகையைப் பார்த்து நின்றஅல்போன்ஸின் வாழ்க்கை அற்புதமானது.







All the contents on this site are copyrighted ©.