2010-10-30 16:23:21

Haiti நாட்டில் சிறப்புப் பணியாற்றி வரும் St Vincent de Paul பிறரன்புப் புதல்வியருக்கு Van Thuan விருது


அக்.30, 2010. Haiti நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதுடன், தற்போதைய காலரா நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் சிறப்புப் பணியாற்றி வரும் St Vincent de Paul பிறரன்புப் புதல்வியருக்கு Van Thuan விருது வழங்கப்பட்டுள்ளது.

"ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சி" என்ற பொருள்படும் இந்த விருது, வளரும் நாடுகளில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு என மூன்றாடுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக Haiti நாட்டில் கல்வி, நல ஆதரவு, பெண்கள் மேம்பாடு மற்றும் ஊட்டச் சத்து வழங்குதல் துறைகளில் சிறப்புப் பணியாற்றிவரும் இத்துறவு சபையின் இல்லங்களும் நில நடுக்கத்தின் போது அழிவுற்றபோதிலும், தங்கள் பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர் இவர்கள்.

நில நடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட Haiti நாட்டில் தற்போது காலரா நோயும் பரவி 284 பேரின் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. 3,600 பேர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

St Vincent de Paul பிறரன்புப் புதல்வியர் சபையின் சகோதரிகள் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, தென் மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் இருந்து வந்து தற்போது Haiti யில் பணியாற்றி வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.