2010-10-29 15:20:34

பிலிப்பின்ஸ் நாட்டின் கடற்கரைப் பகுதியைச் சுத்தம் செய்வதில் ஈடுபட்ட கத்தோலிக்கப் பள்ளி மாணவர்கள்


அக்.29, 2010 - பிலிப்பின்ஸ் நாட்டின் ஒரு கடற்கரைப் பகுதியைச் சுத்தம் செய்வதில் அந்நாட்டின் கத்தோலிக்கப் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இறைவன் படைத்த இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்று Calapan நகரின் புனித குழந்தை கல்வி நிறுவனத்தின் முதல்வர் அருள்தந்தை Alona Cueto கூறினார்.
நீர் வாழ் உயிரினங்களின் ஒரு முக்கிய சரணாலயம் என்று கூறப்படும் Verde என்ற தீவின் கடற்கரையைச் சுத்தம் செய்வதில் இம்மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டுள்ளனர்.15 பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஈடுபட்டுள்ள இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.