2010-10-29 15:22:41

பாகிஸ்தானில் ஞாயிறு மறைகல்விக்கென இரு புத்தகங்கள் வெளியீடு


அக்.29, 2010 - பாகிஸ்தானில் உள்ள ஞாயிறு மறைகல்விப் பணிக் குழு அண்மையில் இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
‘கொடை’ என்ற பொருள்படும் ‘Tofah’ என்ற நூலையும், இயேசுவைக் குறித்து எழுதப்பட்டுள்ள ‘Yasu’ என்ற நூலையும் கராச்சி உயர்மறை மாவட்டப் பேராயர் எவரிஸ்ட் பின்டோ வெளியிட்டார்.
விவிலியத்தின் கருத்துக்களை உள்ளடக்கிய படங்கள், செபங்கள், பாடல்கள், கதைகள் அடங்கிய இப்புத்தகங்கள் மறை கல்வி வழங்கும் ஆசிரியர்களுக்குப் பெரிதும் உதவும் என்று இப்பணிக் குழுவின் தலைவர் அருள்தந்தை Saleh Diego கூறினார்.
ஞாயிறு மறைகல்விக்கு இதுவரை பிற கிறிஸ்தவ சபைகள் வெளியிட்டப் புத்தகங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும், இப்போது வெளியிடபட்டுள்ள இவ்விரு புத்தகங்களால் கத்தோலிக்க படிப்பினைகளை குழந்தைகள் மனதில் இன்னும் ஆழப்படுத்த முடியும் என்றும் அருள்தந்தை Diego கூறினார்.ஞாயிறு மறைகல்விப் பணிக் குழுவின் கணிப்புப்படி, கராச்சி உயர்மறைமாவட்டத்தில் 145 ஞாயிறு பள்ளிகள் உள்ளனவென்றும், இவற்றில் 1100 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர், மற்றும் 25,000 குழந்தைகள் பயில்கின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.