2010-10-29 15:20:04

பலவகை உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கின் வெற்றிகரமான முடிவு


அக்.29, 2010 - பலவகை உயிரினங்களைப் பாதுகாக்க ஜப்பானின் Nagoyaவில் கூடி வந்த பன்னாட்டுக் கருத்தரங்கு வெற்றிகரமாக முடிந்துள்ளதென அக்கருத்தரங்கின் பிரதிநிதிகள் கூறினர்.
பல்வகை உயிரினங்கள் அகில உலக ஆண்டான 2010ல் கடந்த பத்து நாட்களாக ஜப்பானில் நடைபெற்ற இக்கருத்தரங்கு இவ்வெள்ளியன்று நிறைவு பெற்றது.
இக்கருத்தரங்கில் 190 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசப்பட்ட பல விடயங்களில் ஒத்த கருத்துக்கள் வெளிவருவதற்குப் பல தடைகள் இருந்தாலும் இறுதியில் சரியான முடிவுகள் பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்றது கருத்தரங்கின் வெற்றி என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி Hugo Schally கூறினார்.அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உலகின் பல்வகை உயிர் பாதுக்காப்பிற்கென 200 பில்லியன் டாலர்கள், அதாவது, 2000 கோடி டாலர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற ஒரு முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவைச் செயல்படுத்த ஒவ்வொரு நாடும் மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்களை 2012ல் பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.