2010-10-29 15:20:57

இலங்கைப் பணிப்பெண்ணின் மரண தண்டனையைத் தடுக்க தலத்திருச்சபை முயற்சிகள்


அக்.29, 2010 - இலங்கையிலிருந்து சவுதி நாட்டுக்குப் பணி செய்யச் சென்று, அங்கு மரணதண்டனைக்கு உள்ளாகியிருக்கும் Rizana Nafeekன் தண்டனையை மாற்றுமாறு இலங்கைத் தலத்திருச்சபைப் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இலங்கை அரசுத் தலைவருடன் சேர்ந்து சவுதி அரசர் அப்துல்லாவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
2005ம் ஆண்டு சவுதியில் ஒரு வீட்டில் பணி செய்யச் சென்ற Nafeek, குழந்தைக்கு உணவூட்டுகையில், அவ்வுணவு மூச்சுக் குழாயில் சிக்கி அக்குழந்தை உயிரிழந்தது என்றும், அது விபத்தல்ல மாறாக, Nafeek அக்குழந்தையைக் கொன்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
Nafeekன் பெற்றோர், குடும்பத்தினர் அனைவரும் விடுத்த விண்ணப்பங்களை அந்நாட்டின் தலைமை நீதி மன்றம் நிராகரித்து, கடந்த வாரம் அவருக்கு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 2007ம் ஆண்டு முதல் போராடி வரும் இலங்கைக் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை ஜார்ஜ் சிகாமணி தன் முயற்சியில் பிறரையும் ஈடுபடுத்தி வருகிறார்.Nafeekன் சார்பில் சவுதி மன்னருக்கு விண்ணப்பம் செய்துள்ள இலங்கை அரசுத் தலைவருக்கு நன்றி சொல்லும் அருள்தந்தை சிகாமணி, வீடுகளில் பணி செய்ய இலங்கையிலிருந்து செல்லும் பெண்களின் அவல நிலைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.