2010-10-28 15:41:23

புனித பூமியில் அமைதி நிலவ உலகின் 2000 நகரங்கள் இணைந்து செபிக்கும் திட்டம்


அக். 28, 2010 - புனித பூமியில் அமைதி நிலவ வருகிற சனவரி 29, 30 ஆகிய தேதிகளில் உலகின் 2000 நகரங்கள் இணைந்து செபிக்கும் திட்டம் ஒன்று உருவாகி வருகிறது.
உலகின் பல்வேறு கத்தோலிக்க இளையோர் குழுக்கள் இணைந்து, கடந்த இரு ஆண்டுகளாய் நடத்தி வரும் புனித பூமிக்கான செபங்களில் கடந்த ஆண்டு திருத்தந்தையுடனும், எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal உடனும் இணைந்து 1103 நகரங்கள் செபித்தன.
ஒன்றிணைந்து செபிக்கும் இந்த முயற்சியானது திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதிக்கான அவையால் ஆதரிக்கப் படுகிறது. அண்மையில் வத்திக்கானில் நடந்து முடிந்த மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்திலும் இந்த முயற்சி குறித்து பேசப்பட்டது.எனவே இந்த ஆண்டு இந்த செப முயற்சியில் ஏறத்தாழ 2000 நகரங்கள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனவரி 29, 30 ஆகிய இரு நாட்களும் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும் இந்த செப முயற்சியில் இணைய இணையதளத்திலும் Facebook போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.