2010-10-27 16:33:54

மத்திய கிழக்குப் பகுதிகளில் நிறுவப்படும் கத்தோலிக்கத் தொடர்பு சாதன மையம்


அக்.27, 2010 - மத்திய கிழக்குப் பகுதிகளில் கத்தோலிக்கத் தொடர்பு சாதன மையம் ஒன்று நிறுவப்படும் என்றும், இம்மையத்தில் இரு தொலைக்காட்சி நிலையங்கள், மூன்று வானொலி நிலையங்கள், ஒரு தினசரிச் செய்தித்தாள், ஒரு வார இதழ், இணையதள சேவைகள் ஆகியவை அடங்கும் என்றும் வத்திக்கான் அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று வத்திக்கானில் நிறைவுபெற்ற மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் ஒரு வெளிப்பாடாக இந்த மையம் அமையும் என்று வத்திக்கான் தகவல் மையம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள Tele Lumiere, NourSat என்ற இரு கத்தோலிக்க தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த முயற்சியில் இணைக்கப்பட்டுள்ளன.இதுவரை அரேபிய மொழியில் மட்டும் தங்கள் ஒளிபரப்பை நடத்தி வந்த இவ்விரு தொலைக்காட்சி நிறுவனங்களும் இனி கிரேக்கம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்ச், இஸ்பானியம் எனப் பிற மொழிகளிலும் தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.