2010-10-26 15:49:57

பிலிப்பீன்ஸின் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை எதிர்க்கும் தலத்திருச்சபை.


அக் 26, 2010. பிலிப்பீன்ஸ் நாட்டில் குடும்பக்கட்டுபாடு மசோதாவைக் குறித்து தலத்திருச்சபையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் முன், செயற்கை வழிமுறைகள் குறித்த தன் நிலைப்பாட்டை அரசு தெளிவுப்படுத்தவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களில் அரசின் அணுகுமுறைகள் தெளிவுப்படுத்தப்படவேண்டும் என்ற பிலிப்பீன்ஸின் காசெரஸ் பேராயர் லியனார்தோ லெகாஸ்பி, கருத்தடைச் சாதன பயன்பாட்டை ஓர் அத்தியாவசிய மருந்து என்பது போல் நடத்துவது, மற்றும் பள்ளிகளில் குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கற்பிப்பது போன்றவைகள் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

பொருளாதார சீரமைப்பிற்குச் சீரிய நிர்வாக முறைகளையும் நல்ல பொருளாதாரக் கொள்கைகளையும் கைக்கொள்வதை விடுத்து, மக்கள்தொகையைக் குறைப்பதன் மூலம் பொருளாதார மேம்பாட்டைக் காணலாம் என்பது தவறான அணுகுமுறை என்றார் பேராயர் லெகாஸ்பி.

இன்றையப் பிரச்னைகளுக்கானத் தீர்வு கருத்தடைச் சாதனங்களில் இல்லை மாறாக சுயக்கட்டுப்பாட்டிலும், திருமணத்தின் மீதான அர்ப்பணத்திலும் உள்ளது எனவும் கூறினார் அவர்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் தற்போதைய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள செயற்கைக் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை வன்மையாக எதிர்த்து வருகிறது தலத்திருச்சபை.








All the contents on this site are copyrighted ©.