2010-10-26 15:47:55

ஐரோப்பாவில் ஒழுக்க ரீதி குறித்தக் கலந்துரையாடல்களில் கிறிஸ்தவ சபைகளின் பங்களிப்பை அரசுகள் அனுமதிக்க வேண்டும்.


அக் 26, 2010. ஐரோப்பாவில் ஒழுக்க ரீதி குறித்தக் கலந்துரையாடல்களில் கிறிஸ்தவ சபைகளின் உயிர்துடிப்புடைய பங்களிப்பை அரசுகள் அனுமதிக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் ஐரோப்பாவின் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகள்.

கிரேக்க தீவான Rhodesல் கூடி விவாதித்த கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள், சமூகங்களின் வருங்காலத்தோடு தொடர்புடைய ஒழுக்க ரீதி விவாதங்களில் பங்கேற்க கிறிஸ்தவ சபைகள் எப்போதும் தயாராக உள்ளன என்றனர்.

அரசும் மதமும் ஒன்றோடொன்று கலக்காமல் செயல்படவேண்டும் என்ற நிலைப்பாடு, இருதரப்பினரிடையேயான சிறப்பு ஒத்துழைப்பை விலக்கி வைப்பதாக இருக்கக்கூடாது எனவும் கூறியுள்ள இப்பிரதிநிதிகள், ஐரோப்பிய கிறிஸ்தவ மூலத்தை அங்கீகரிப்பது என்பது, உலகமயமாகி வரும் வருங்காலத்திற்கு இன்றியமையாத திறவுகோல் என்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.