2010-10-25 16:30:15

வட கொரியா மிகப்பெரிய மனிதகுல நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை


அக்.25, 2010 - வட கொரியாவில் 35 இலட்சம் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாடு மிகப்பெரிய மனிதகுல நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் ஐ.நா. அமைப்பு ஓர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

போதிய சத்துணவின்மையாலும், பொருளாதாரப் பிரச்சனைகளாலும் அந்நாடு துன்புறுவதாகவும் குழந்தைகளும், பெண்களும் முதியோருமே இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.

2 கோடியே 40 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட வட கொரியாவில் 35 இலட்சம் பெண்களும் குழந்தைகளும் பசியால் வாடுவது ஏற்றுக் கொள்ளப் படமுடியாதது எனக்கூறும் இவ்வறிக்கை, அண்மைய வெள்ளப்பெருக்குகளும், வறட்சியும் இந்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன என்றும் கூறுகிறது.

இதற்கிடையே, வட கொரியாவில் ஆறு கட்டாயத் தொழில் முகாம்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.