2010-10-25 16:28:24

புயலாலும் வெள்ளப் பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள மியான்மார் மக்களுக்குத் உதவிகளை வழங்கி வரும் கத்தோலிக்க சமூக அமைப்பு


அக்.25, 2010 - மியான்மார் நாட்டில் அண்மைப் புயலாலும் வெள்ளப் பெருக்காலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருவதாக அறிவித்துள்ளது அந்நாட்டின் கருணா ப்யாய் (Karuna Pyay) என்ற கத்தோலிக்க சமூக அமைப்பு.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்கியதுடன், தற்போது குடிநீர், அரிசி, சமையல் எண்ணெய் போன்றவைகளை இலவசமாக விநியோகித்து வருவதாகக் கூறினார் இவ்வமைப்பின் இயக்குனர் குரு David Ba Thein.

வெள்ளியன்று இடம்பெற்ற பெரும்புயலால் பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், மக்கள் போதிய உதவிகளைப் பெற முடியா நிலை இருப்பதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

புயலின் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக ஏழு முதல் எட்டு மீட்டர்கள் உயரம் எழும்பியக் கடல் அலைகளால், Kyaukpya என்ற நகரில் மட்டுமே மொத்த வீடுகளுள் 75 விழுக்காடு சேதமடைந்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.