2010-10-23 15:56:57

பெரும்பாலானக் குடியேற்றதாரர் குடியிருப்பு வசதிகளில் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் - ஐ.நா.வல்லுனர்


அக்.23,2010. உலகிலுள்ள சுமார் இருபது கோடிக் குடியேற்றதாரரில் பெரும்பாலானோர் வீட்டுவாரிய வசதிகளில் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர், எனவே இந்தப் பிரச்சனையை மனித உரிமைகள் என்ற கண்ணாடி கொண்டு நோக்க வேண்டுமென நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா.வல்லுனர் ஒருவர்.

குடியிருப்பு உரிமை குறித்த ஐ.நா.சிறப்பு வல்லுனர் ராக்கெல் ரோல்னிக் நிருபர்களிடம் பேசிய போது குடியேற்றதாரத் தொழிலாளர்கள் வாழும் நிலைமைகள் குறித்து விளக்கினார்.

மின்சாரம், தண்ணீர் மற்றும் பிற வசதிகளின்றி தகரங்களாலான வீடுகளில் வாழ்வோரையும், குளிக்கும் அறைகளிலும் சமைக்கும் இடங்களிலும் உறங்குவோரையும் தான் பார்த்ததாகத் தெரிவித்தார் ரோல்னிக்.

இவர்கள் சில சமயங்களில் வன்முறைக்கும், பாலியல் பலாத்காரத்திற்கும், வெளியே செல்லமுடியாத நிலைக்கும் ஆளாகின்றனர் என்று ஐ.நா.பொது அவையில் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

குடியேற்றதாரர் குறித்த சர்வதேச ஒப்பந்தத்தை 43 நாடுகள் அமல்படுத்தியுள்ளன என்றும் ரோல்னிக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.