2010-10-22 16:01:07

உலகின் மக்கள் தொகை 2070ம் ஆண்டுவாக்கில் குறையக்கூடும்


அக்.22,2010: உலகின் மக்கள் தொகை 2070ம் ஆண்டுவாக்கில் குறையக்கூடும், இந்த நூற்றாண்டின் மத்திய பாகத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறாரின் எண்ணிக்கை 4 கோடியே 90 இலட்சமாகக் குறையும், அதேசமயம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை நூறு கோடியிலிருந்து இருநூறு கோடியாக உயரும் என்று ஒரு வல்லுனர் கூறினார்.

உலக மக்கள் தொகை அடுத்த 40 ஆண்டுகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதி அதாவது 690 கோடியிலிருந்து 910 கோடியாக உயரும் என்று ஐ.நா.மக்கள் தொகை அலுவலகம் கூறியுள்ளது, ஆயினும் இந்த அதிகரிப்பானது பிறப்பு விகிதத்தை வைத்து இடம் பெறாது என்று உலக மக்கள் தொகை புள்ளி விபர வல்லுனர்களில் ஒருவரான Phillip Longman கூறினார்.

ஜப்பானின் குறைவான பிறப்பு விகிதம் பற்றிக் கூறிய ஒரு வல்லுனர், ஜப்பானின் தற்போதைய பிறப்பு விகிதமான ஒரு பெண்ணுக்கு 1.25 குழந்தை என்ற நிலை மாறாமல் இருந்தால் அந்நாட்டில் கடைசி குழந்தை 2959ம் ஆண்டில் பிறக்கும் என்று சொல்லியிருப்பதை லாங்மேன் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.