2010-10-21 15:18:06

வாஷிங்க்டன் D.C. உயர்மறைமாவட்டத்தில் புதிய குருத்துவ பயிற்சி மடம்


அக்.21,2010 - அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் D.C. உயர்மறைமாவட்டத்தில் குருத்துவத்தின் மேல் எழுந்துள்ள ஆர்வத்தின் எதிரொலியாய் அம்மறைமாவட்டத்தில் புதிய குருத்துவ பயிற்சி மடம் ஒன்று திறக்கப்பட உள்ளதென அம்மறை மாவட்டத்தின் பேராயர் Donald Wuerl கூறினார்.
இப்புதன் பொது மறை போதகத்தின் இறுதியில் திருத்தந்தை அறிவித்த 24 கர்தினால்களில் ஒருவரான பேராயர் Wuerl, திருச்சபையின் படிப்பினைகள் இன்றைய உலகக் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிந்தாலும், இளையோரிடையே திருச்சபை பணிகள் மீது, சிறப்பாக, திருத்தந்தை அண்மையில் ஒரு பேராயமாக உருவாக்கிய புதிய மறைபரப்புப் பணியில் ஆர்வம் எழுந்திருப்பது நம்பிக்கை தரும் போக்கு என்று கூறினார்.இந்தக் குருத்துவ பயிற்சி மடம் வாஷிங்டன் உயர்மறைமாவட்டத்தின் இரண்டாவது மடம் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், சென்ற ஆண்டு நிலவரப்படி அமெரிக்க ஐக்கிய நாட்டில் 5,926 பேர் குருத்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குருத்துவ அழைப்பில் ஏற்பட்ட ஒரு தொய்வு நிலையைத் தாண்டி, கடந்த 15 ஆண்டுகளாக இறையவைத்தல் ஏறுமுகமாக உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கவை.







All the contents on this site are copyrighted ©.