2010-10-21 15:18:38

தனது 97வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார் சீன ஆயர் John Baptist Liu Jingshan


அக்.21,2010 - சீனாவில் அண்மையில் கொண்டாடப்பட்ட முதியோர் நாளன்று, சீனத் தலத்திருச்சபையிலேயே மிக அதிக வயதான முன்னாள் ஆயர் John Baptist Liu Jingshanன் 97வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
Ningxia மறைமாவட்டம் இவ்வாண்டு கொண்டாடி வரும் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆயர் Liuவின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது.
ஆயர் Joseph Li Jing தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் வேறு ஆறு ஆயர்கள், 40 குருக்கள், 30 அருட்சகோதரிகள் மற்றும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
97 வயதான ஆயர் Liu 1913ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி பிறந்தார். 1942ல் குருவான இவர் 1951 முதல் 1980 வரை சிறைக்காவலில் கடின உழைப்புக்கு உள்ளாக்கப்பட்டார். 1980ல் விடுதலை செய்யப்பட்ட இவர் 1993ம் ஆண்டு அவரது 80வது வயதில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.97 வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஆயர் Liu இன்னும் நல்ல உடல் நலத்துடன் தன்னைத் தானே காத்துக் கொள்ளும் நிலையில் உள்ளார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.