2010-10-20 15:56:40

திருத்தந்தை 24 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்துள்ளார்


அக்.20,2010. இலங்கையின் கொழும்புப் பேராயர் மால்கம் இரஞ்சித் உட்பட 24 புதிய கர்தினால்களின் பெயர்களை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வருகிற நவம்பர் இருபதாம் தேதி இந்தப் புதிய கர்தினால்களின் திருநிலைப்பாட்டுத் திருவழிபாடு இடம் பெறும் என்பதைத் தான் மகிழ்ச்சியோடு அறிவிப்பதாகக் கூறிய திருத்தந்தை, கர்தினால்கள் பாப்பிறையின் பணிகளுக்கு உதவவும், விசுவாசத்தின் ஒன்றிப்பிற்கும் திருச்சபையின் ஒற்றுமைக்கும் இவர்கள் காணக்கூடிய சாட்சிகளாக இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்தப் புதிய கர்தினால்களுக்காகச் செபிக்குமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, இந்த 24 பேரின் பெயர்களையும் வாசிப்பதாக வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானப் பயணிகளிடம் கூறினார்.

இந்த 24 பேரில் 15 பேர் ஐரோப்பியர்கள், 4 பேர் ஆப்ரிக்கர்கள், 2 பேர் வட அமெரிக்கர்கள், 2 பேர் தென் அமெரிக்கர்கள், ஆசியர் ஒருவர். இவர்களில் நான்கு பேர் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். புதிதாகத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதியுடையவர்களின் வயது எண்பது ஆகும்.

இப்புதனன்று ஆசியாவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள ஒரே புதிய கர்தினாலாகிய கொழும்புப் பேராயர் இரஞ்சித், இலங்கையின் இரண்டாவது கர்தினாலாவார். இலங்கையின் முதல் கர்தினாலாகிய கொழும்புவின் முன்னாள் பேராயர் தாமஸ் குர்ரே 1988ல் இறைவனடி சேர்ந்தார்.

புதிய கர்தினால்கள்

1. பேராயர் Angelo Amato. இத்தாலியர். இவர் புனிதர் நிலைக்கானப் பேராயத் தலைவர்.

2.முதுபெரும் தலைவர் Antonios Naguib, எகிப்தியர். காப்டிக் ரீதியின் அலெக்சாண்ட்ரியாவின் முதுபெரும் தலைவர்.

3. பேராயர் Robert Sarah, கினி நாட்டவர், (ஆப்ரிக்கா). Cor Unum என்ற திருப்பீட பிறரன்பு அவைத் தலைவர். வத்திக்கானின் பிறரன்பு நடவடிக்கைகளுக்குத் தலைவர்

4. பேராயர் Francesco Monterisi, இத்தாலியர். உரோம் புனித பவுல் பசிலிக்காவின் தலைமைக்குரு

5. பேராயர் Fortunato Baldelli இத்தாலியர். வத்திக்கான் பாவமன்னிப்புத் துறை அதிகாரி

6. பேராயர் Raymond Leo Burke, அமெரிக்கர். வத்திக்கான் உச்சநீதிமன்றத் தலைவர்

7. பேராயர் Kurt Koch, சுவிட்சர்லாந்து நாட்டவர். திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர்

8. பேராயர் Paolo Sardi, இத்தாலியர். வத்திக்கான் Vatican deputy

chamberlain.

9. பேராயர் Mauro Piacenza இத்தாலியர். குருக்கள் பேராயத் தலைவர்.

10. பேராயர் Velasio De Paolis இத்தாலியர். திருப்பீட பொருளாதார விவகாரங்களுக்கானத் தலைவர்

11. பேராயர் Gianfranco Ravasi, இத்தாலியர். திரு்பபீட கலாச்சார அவைத் தலைவர்

12. பேராயர் Medardo Joseph Mazombwe. ஜாம்பிய நாட்டவர்.(ஆப்ரிக்கா) லுசாகா முன்னாள் பேராயர்.

13. பேராயர் Raul Eduardo Vela Chiriboga, ஈக்குவதோர், (தென் அமெரிக்கா). குய்ட்டோ முன்னாள் பேராயர்

14. பேராயர் Laurent Monsengwo Pasinya, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஆப்ரிக்கா. கின்ஷாசா பேராயர்

15. பேராயர் Paolo Romeo இத்தாலியர். இத்தாலியின் பலேர்மோ பேராயர்.

16. பேராயர் Donald William Wuerl அமெரிக்கர், அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டன் பேராயர்.

17. பேராயர் Raymundo Damasceno Assis, பிரேசிலின் Aparecida பேராயர்

18. பேராயர் Kazimierz Nycz , போலந்து வார்சா பேராயர்.

19. பேராயர் Albert Malcom Ranjith Patabendige Don ,கொழும்புப் பேராயர், இலங்கை

20. பேராயர் Reinhard Marx ,ஜெர்மனியின் Munich மற்றும் Freising பேராயர்.



80 வயதுக்கு மேற்பட்டவர்கள் :



1. பேராயர் Jose' Manuel Estepa Llaurens, (ஸ்பெயின்)

2. பேராயர் Elio Sgreccia, திருப்பீட வாழ்வுக் கழக முன்னாள் தலைவர் (இத்தாலியர்)

3. Monsignor Walter Brandmuller, திருப்பீட வரலாற்று அறிவியல் கமிட்டியின் முன்னாள் தலைவர் (ஜெர்மானியர்)

4. Monsignor Domenico Bartolucci, (இத்தாலியர்)








All the contents on this site are copyrighted ©.