2010-10-19 16:28:27

Bosnia Herzegovinaவில் கத்தோலிக்கத்திருச்சபையின் கல்வித்திட்டமானது ஒப்புரவுக்கு உதவுவதாக உள்ளது


அக். 19, 2010. Bosnia Herzegovinaவில் கத்தோலிக்கத் திருச்சபையால் செயல்படுத்தப்பட்டுவரும் கல்வித்திட்டமானது அப்பகுதியின் ஒப்புரவுக்கும் மதங்களிடையேயான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும் உதவுவதாக அறிவித்துள்ளனர் அப்பகுதி கத்தோலிக்கச் சமூகத்தொடர்பாளர்கள்.

தலத்திருச்சபையின் கல்வித்திட்டமானது கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் இஸ்லாமிய மாணவர்கள் அமைதியில் ஒன்றிணைந்து வருவதற்கு உதவியுள்ளதாக அறிவித்தனர் அவர்கள்.

போஸ்னியப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அங்குள்ள கத்தோலிக்கர்களின் வாழ்வில் விடிவு பிறக்கவில்லை மற்றும் அவர்கள் குடிபெயர்வது தொடர்கிறது எனக்கூறும் பத்திரிகையாளர்கள் இவான் மற்றும் மிரெலா ஸிசிச், இத்தகைய சூழலிலும் கத்தோலிக்கத் திருச்சபை தன் கல்வித்திட்டங்கள் மூலம் ஒப்புரவுக்கும் மதங்களிடையேயான உறவுக்கும் உழைத்து வருவதாகத் தெரிவித்தனர்







All the contents on this site are copyrighted ©.