2010-10-18 16:35:15

பன்முகத்தொடர்பு வசதிகள் கொண்ட இந்தியத் திருச்சபையின் வலைத்தளம் உலகத் திருச்சபையில் முதன் முதலாக செய்யப்பட்டுள்ள முயற்சி


அக்.18,2010. இந்தியத் திருச்சபை குறித்த விவரங்களைச் செல்லிடப் பேசியில் பெறுவதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இஞ்ஞாயிறன்று Shillongல் நடந்து முடிந்த அகில இந்திய கத்தோலிக்க இளையோர் மாநாட்டின் இறுதியில் இந்தியாவுக்கான திருப்பீடத்தின் தூதர் பேராயர் Salvatore Pennacchio இந்த வசதியை இணையதளத்தில் ஆரம்பித்து வைத்தார்.

கத்தோலிக்கர்கள் அதிகமாய் உள்ள வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இளையோருடன் சேர்ந்து, நாடெங்கும் 60,000 இளையோரும், 400 குருக்களும் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

பன்முகத்தொடர்பு வசதிகள் கொண்ட இந்த வலைத்தளம் உலகத் திருச்சபையில் முதன் முதலாக செய்யப்பட்டுள்ள முயற்சி என்று UCANEWS செய்தித் துறையின் இயக்குனர் இயேசுசபைக் குரு மைக்கிள் கெல்லி கூறினார்.

கணனித் தொடர்புநுட்பத்தில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில் இது போன்றதொரு முயற்சி பல இளையோரையும் ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. youthactiv8.org என்ற இணையதள முகவரி மூலம் இந்த வசதிகளைப் பெற முடியும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.