2010-10-18 16:35:26

இந்தோனேசியக் கல்விச் சட்டம் மறு பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும் - கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் கல்வி அமைப்புகள் அழைப்பு


அக்.18,2010. தனியார் பள்ளிகளுக்கு எதிராகச் செயல்படும் இந்தோனேசியக் கல்விச் சட்டம் மறு பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் கல்வி அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்த வரையில் தப்பான முன் சார்பு எண்ணங்களுடன் செயல்படும் அரசின் போக்கு மாற வேண்டும் என இந்தோனேசியாவின் Pekalonganலிருந்து செயல்படும் புனித மேரி கல்வி அமைப்பின் அருள்சகோதரி மரியா பெர்னார்டின் அழைப்பு விடுத்தார்.

அரசின் கீழ் இயங்கும் பள்ளிகள் ஆண்டொன்றிற்கு உதவித் தொகையாக பத்து கோடி இந்தோனேசிய ரூபாய்களைப் பெறும்போது, தனியார் பள்ளிகள் இருபது இலட்சம் ரூபாய்களையே அரசிடமிருந்து பெற முடிகிறது எனவும் கூறினார் அவர்.

குழந்தைகளுக்குக் கல்வியறிவை வழங்குவதில் அரசுக்குத் துணை நிற்கும் தனியார் பள்ளிகள் பாகுபாட்டுடன் நடத்தப் படக் கூடாது எனவும் வேண்டினார் Notre Dame சபையின் அருள்சகோதரி பெர்னார்டின்.








All the contents on this site are copyrighted ©.