2010-10-16 16:02:57

முத்திப்பேறு பெற்ற ஆறு பேர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கின்றனர்


அக்.16,2010: Mary Mackillop, Andre Bessette, Juana Josefa Ciptria Barriola, Stanislaw Soltys Kazimierczyk, Giulia Salzano, Camilla Battista Varano ஆகிய ஆறு முத்திப்பேறு பெற்றவர்களை இஞ்ஞாயிறன்று புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஞாயிறு காலை விழாத் திருப்பலி நிகழ்த்தும் திருத்தந்தை இவர்களைப் புனிதர்கள் என அறிவிப்பார்.

இத்திருப்பலியில், போலந்து அரசுத்தலைவர் Bronisław Komorowski, அவரோடு 33 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Kevin Rudd அவரோடு 16 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு, கானடா வெளியுறவு அமைச்சர் Lawrence Cannon, அந்நாட்டு செனட் அவைத் தலைவர் Noël A. Kinsella, இவர்களோடு 30 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு, ஸ்பெயினின் நீதித்துறை உதவி அமைச்சர் Juan Carlos Campo Moreno அவரோடு 9 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு, இத்தாலி அமைச்சரவையின் நேரடிப் பொதுச் செயலர் Gianni Letta அவரோடு 8 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு என உயர்மட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இன்னும், ஆஸ்திரேலியாவிலிருந்து ஆறாயிரம், போலந்திலிருந்து ஆறாயிரம், கானடாவிலிருந்து ஐயாயிரம் என இத்திருப்பலியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனிதராக உயர்த்தப்படவுள்ள மேரி மெக்கில்லாப், உரிமை இழந்தவர்களுக்கான நீதியின் அடையாளமாக நோக்கப்படுபவர். இவர் முதல் ஆஸ்திரேலியப் புனிதராவார்.

இன்னும், ஆந்த்ரே பெசெ கானடாவையும், ஹூவானா பரியோலா ஸ்பெயினையும், ஸ்தனிஸ்லாவ் Kazimierczyk போலந்தையும், ஜூலியா சால்சனோ மற்றும் கமிலா வரானோ இத்தாலியையும் சேர்ந்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.