2010-10-16 16:01:46

போலந்து அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு


அக்.16,2010: போலந்து அரசுத்தலைவர் Bronisław Komorowski ஐ இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

போலந்து நாட்டு முத்திப்பேறு பெற்ற ஸ்தனிஸ்லாவ் Kazimierczyk இஞ்ஞாயிறன்று புனிதர் என அறிவிக்கப்படவுள்ள திருப்பலியில் கலந்து கொள்வதற்காக 33 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவுடன் இத்தாலி வந்துள்ள போலந்து அரசுத்தலைவர் Komorowski ஐ திருத்தந்தையை 32 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகள் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Komorowski.

இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 32ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இச்சந்திப்பு இடம் பெற்றதாகவும், இதில் தலத்திருச்சபைக்கும் அரசுக்கும் இடையேயான உரையாடல் வலியுறுத்தப்பட்டதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது







All the contents on this site are copyrighted ©.