2010-10-16 16:06:55

அக்டோபர் 17:அனைத்துலக வறுமை ஒழிப்பு நாள்


அக்.16,2010: தரமான மற்றும் உற்பத்தியைப் பெருக்கும் வேலை, வறுமையை அகற்றுவதற்கும் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கும் உகந்த வழிகளில் ஒன்றாகும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

இன்றைய உலகளாவிய பொருளாதாரப் பிரச்சனை மேலும் 6 கோடியே 40 இலட்சம் பேரை வறுமைக்குள்ளும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோர் வேலை இழக்கவும் காரணமாகியுள்ளது என்று கூறும் மூன், வறுமைக்கும் தரமான வேலைக்கும் இடையே காணப்படும் இடைவெளியை எவ்வாறு அகற்றப் போகிறோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இளையோர் வேலைவாய்ப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென்று கூறும் அவர், வேலை இல்லாமல் இருப்போரில் வயது வந்தோரைவிட இளையோர் மூன்றுமடங்கு அதிகம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அக்டோபர் 17, இஞ்ஞாயிறன்று அனைத்துலக வறுமை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டுச் செய்தி வெளியிட்ட மூன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் 8 கோடியே 10 இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் வேலையின்றி இருந்தனர்.







All the contents on this site are copyrighted ©.