2010-10-15 16:04:07

காமன்வெல்த் விளையாட்டுகள் இந்தியா சர்வதேச அளவில் உயர உதவியுள்ளன - உரிமை ஆர்வலர்கள்


அக்.15,2010. புதுடெல்லியில் நடந்து முடிந்துள்ள காமன்வெல்த் விளையாட்டுகள் இந்தியா மீது நம்பிக்கை வளரவும் சர்வதேச அளவில் அதன் பெயர் உயரவும் உதவியுள்ளன என்று சில திருச்சபை அதிகாரிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுகளுக்குப் பின்னர் நாட்டில் விளையாட்டின்மீது ஒரு புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது மற்றும் இவை நல்ல பல செயல்களுக்கு இட்டுச் செல்லும் என்று இந்திய துறவு சபைகள் அவையின் தேசியச் செயலர் அருட்சகோதரர் Mani Mekkunnel கூறினார்.

ஒலிம்பிக் விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய விளையாட்டாக அமைகின்ற இந்த காமன்வெல்த் விளையாட்டுகளில் 71 நாடுகளிலிருந்து சுமார் ஏழாயிரம் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாதம் 3 முதல் 14 வரை நடைபெற்ற இவ்விளையாட்டுகளில் இந்தியா 101 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தைப் பெற்றது. இந்தப் பதக்கங்களை வென்றவர்களில் பலர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.