2010-10-14 16:03:24

மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் நிகழ்ந்தவை


அக்.14,2010. மத்திய கிழக்கு நாடுகளுக்கான முதல் சிறப்பு ஆயர் மாமன்றத்தின் ஆறாவது அமர்வு இவ்வியாழன் காலை திருத்தந்தையின் முன்னிலையில் லெபனன், அந்தியோக்கு முதுபெரும் தலைவர் மூன்றாம் Ignace Youssif Younan தலைமையில் தொடங்கியது. இக்காலை அமர்வில் 24 மாமன்றத் தந்தையர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய கிழக்குப் பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்துள்ள வன்முறைகளின் காரணமாக அப்பகுதியை விட்டு கிறிஸ்தவர்கள் பிற நாடுகளில் குடியேறி வருவது அதிகரித்துள்ளது என்று தன் உரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டார் சிரியாவுக்கான கிரேக்க மெல்கைட்ரீதி (Greek-Melkite) முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregorios Laham.

கிறிஸ்தவர்கள் இவ்வாறு வெளியேறினால், மத்திய கிழக்குப் பகுதி முழுமையிலும் இஸ்லாமிய கலாச்சாரம் மட்டுமே உருவாகும் என்றும், அப்படி ஒரு சூழ்நிலை எழுந்தால், அது கிழக்கில் இஸ்லாம் மேற்கில் கிறிஸ்தவம் என்று பாகுப்படுகளை உண்டாக்கி, உலக அமைதிக்கு ஆபத்தாகி விடும் என்றும் சிரியாவின் முதுபெரும் தலைவர் கூறினார்.

இந்த ஆபத்தைத் தவிர்க்க கிறிஸ்தவர்கள் இப்போதே இஸ்லாமியர்களுடன் உரையாடல் முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென்று இவர் மேலும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.