2010-10-14 16:05:05

சிறப்பு ஆயர் மாமன்றத்தின் பிரதிநிதிகள் இத்தாலி அரசுத்தலைவருடன் சந்திப்பு


அக்.14,2010. தற்போது வத்திக்கானில் நடைபெற்று வரும் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் பிரதிநிதிகள் இப்புதன் பிற்பகல் இத்தாலியின் அரசுத்தலைவர் Giorgio Napolitanoவை அவரது அரசு மாளிகையில் சந்தித்தனர்.

அந்தியோக்கு மாரனைட்ரீதி முதுபெரும் தலைவர் கர்தினால் Nasrallah Pierre Sfeir, கீழைரீதி பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri, இச்சிறப்பு ஆயர் மாமன்றத்தின் செயலர் பேராயர் Nikola Eterovic ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தற்போது நடைபெறும் ஆயர் மாமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு என்று கூறிய இத்தாலிய அரசுத் தலைவர் Napolitano, பல்வேறு ரீதிகளுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நடைபெறும் உரையாடல் கலாச்சாரங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சி என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.