2010-10-14 15:15:30

அக்டோபர் 15 நாளும் ஒரு நல்லெண்ணம்


முத்திப்பேறு பெற்ற ஜூலியா சால்சனோ இத்தாலியில் கசெர்த்தா மாநிலத்தில் 1846ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி பிறந்தார். இவரது தந்தை, நேப்பிள்ஸின் அரசர் இரண்டாம் ஃபெர்டினாண்டிடம் தளபதியாக இருந்தவர். எனினும் ஜூலியா தனது நான்கு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தனது 15வது வயது வரை புனித நிக்கோலா பிறரன்பு சபை சகோதரிகளிடம் வளர்ந்தார். ஆசிரியர் படிப்பை முடித்து கசோரியாவில் வேலை செய்து வந்தார். அச்சமயம் மறைக்கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் எல்லாரும் அறியச் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு 1905ல் இயேசுவின் திருஇதய மறைக்கல்வி சகோதரிகள் சபையை ஆரம்பித்தார். “மறைக்கல்வி போதித்துக் கொண்டிருக்கும் போதே இறப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று தம் சகோதரிகளிடம் சொன்னவர். அந்த அளவுக்கு மறைக்கல்வியில் ஆர்வத்தைத் தூண்டியவர். முத்திப்பேறு பெற்ற ஜூலியா “புதிய நற்செய்திப் பணியின் இறைவாக்கினர்” என்று புகழப்படுகிறார். இவரை அக்டோபர் 17, வருகிற ஞாயிறன்று புனிதர் என அறிவிப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.