2010-10-13 16:31:28

ஆப்ரிக்கக் கண்டத்தின் பல நாடுகள் இன்னும் பசியால் வாடி வருகின்றன


அக்.13,2010 ஒரு சில முன்னேற்றங்கள் அண்மைக் காலங்களில் ஏற்பட்டாலும், ஆப்ரிக்கக் கண்டத்தின் பல நாடுகள் இன்னும் பசியால் வாடி வருகின்றன என்று அகில உலக உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் (International Food Policy Research Institute - IFPRI) தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, உலகின் 25 நாடுகளில் பசிக் கொடுமை மிக கவலை தரும் நிலையில் உள்ளதெனவும், இந்த 25 நாடுகளில் 23 நாடுகள் ஆப்ரிக்கா, ஆசியா பகுதிகளில் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் இனப் போர்களுக்கென ஒவ்வொரு நாடும் அதிகமாய் செலவு செய்வதால், மக்கள் பசியைப் போக்க அந்த அரசுகள் முயற்சிகள் எடுக்காமல் உள்ளன. இவ்வாறு பசியின் கொடுமை அதிகமாக நிலவுவது DR காங்கோ, புருண்டி, எரித்ரியா, சாட் ஆகிய சஹாராப் பகுதி நாடுகளே என்று இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.