2010-10-12 15:42:42

இலங்கை கிறிஸ்தவ எழுத்தாளர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்குப் பங்காற்றியுள்ளார்கள் என்கிறார் அந்நாட்டு பிரதமர் ஜெயரத்னே.


அக்12, 2010. இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் அடுத்தவரின் கலாச்சாரத்தை மதிப்பதற்கு உதவியுள்ளதன் மூலம் இலங்கை கிறிஸ்தவ எழுத்தாளர்கள் சமூகத்தின் ஒற்றுமைக்குப் பங்காற்றியுள்ளார்கள் எனப் பாராட்டினார் அந்நாட்டு பிரதமர் ஜெயரத்னே.

தேசிய கிறிஸ்தவ இலக்கியக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் உரைக்கையில், மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அவசியமான ஆன்மீகத்தைக் கண்டுகொள்ள கிறிஸ்தவ எழுத்தாளர்கள் உதவியுள்ளார்கள் என்றார்.

இலங்கையின் மதவிவகார அமைச்சகத்தின் கிறிஸ்தவத்துறை ஏற்பாடு செய்த இந்த இலக்கியக் கொண்டாட்டத்தில் சிங்கள இலக்கியத்திற்கான விருது கொழும்புவின் முன்னாள் பேராயர் ஆஸ்வால்டு கோமிஸ்க்கு வழங்கப்பட்டது.

பல மொழி பேசும் மற்றும் பல இனங்களைச் சேர்ந்த மக்கள் இக்கிறிஸ்தவ இலக்கிய விழாவில் ஒன்றிணைந்து வந்துள்ளது போன்ற ஒரு சூழலையே இலங்கை முழுவதும் காண விரும்புவதாகத் தெரிவித்தார் இலங்கை பிரதமர் ஜெயரத்னே.








All the contents on this site are copyrighted ©.