2010-10-11 16:58:58

வியட்நாம் தலத் திருச்சபையின் குழந்தைத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய பணிகள்.


அக்.11,2010. குழந்தைத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய பணிகளை வியட்நாம் தலத் திருச்சபை மேற்கொண்டுள்ளது.

மத்திய வியட்நாமில் உள்ள Hue உயர்மறைமாவட்டம் HIV/AIDS குறித்த விழிப்புணர்வு, இல்லங்களில் நிலவும் பலவகை கொடுமைகள், குழந்தைகள் மத்தியில் நிலவ வேண்டிய சமத்துவம் இவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகக் பயிற்சிப் பாசறைகளை நடத்தி வருகிறது.

இப்பயிற்சிப் பாசறைகளில் தெருவோரக் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பெற்றோரின் மண முறிவினால் துன்புறும் குழந்தைகள் என்ற பல ஏழைக் குழந்தைகள் பங்கேற்றனர்.

அமல மரியின் புதல்வியர் என்ற சபையைச் சார்ந்த சகோதரிகளின் மேற்பார்வையில் நடைபெறும் இப்பாசறைகள், வரும் ஆண்டுகளில் கிராமப்புற இளையோருக்கும் நடத்தப்படும் என்று Hue உயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.