2010-10-11 17:00:07

ஒரு சில மக்களின் விசுவாசம் வெறும் சடங்குகளிலும் மூடநம்பிக்கையிலும் வளர்ந்துள்ளது வேதனை அளிக்கிறது - கர்தினால் வர்கி விதயாத்தில்


அக்.11,2010. ஒரு சில மக்களின் விசுவாசம் வெறும் சடங்குகளிலும் மூடநம்பிக்கையிலும் வளர்ந்துள்ளது வேதனை அளிக்கிறதென்று இந்தியக் கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.

சீரோ மலபார் ரீதித் தலைவரும் எர்ணாகுளம் அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயருமான கர்தினால் வர்கி விதயாத்தில் அனுப்பிய சுற்றுமடலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இச்சுற்றுமடலானது இவ்வுயர் மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குக் கோவில்களிலும் இஞ்ஞாயிறன்று வாசிக்கப்பட்டது.

இன்று உலகில் நிலவும் மனித உரிமைகளுக்கு பத்துக் கட்டளைகளே அடித்தளம் என்று கூறிய கர்தினால், மனித உரிமைகளை மதிக்காத விசுவாசத்தின் மூலம் ஒருவர் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார் என்றும் கூறினார்.

குழந்தைப் பிறப்பை மறுத்தல், கருக் கலைப்பு ஆகியவைகளில் ஈடுபடும் தம்பதியர் தங்கள் சுயநலன்களை மட்டுமே மையப்படுத்தி வருவதை இன்று அதிகம் காண முடிகிறது என்றும், இந்தத் தவறான போக்கிற்குக் கத்தோலிக்கர்கள் மாற்று சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் கர்தினால் விதயாத்தில் தன் சுற்று மடலில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.