2010-10-11 16:44:21

அக்டோபர் 12 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1492 - கொலம்பஸ் கரிபியனில் பஹாமாசை அடைந்தார். அவர் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணினார்.

1582 - கிரகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1798 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

1941 - உக்ரேனின் தினிபுரோபெத்ரோவ்ஸ்க் நகரில் இந்நாளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாத்சி ஜெர்மானியினர் 11,000 யூதர்களைக் கொன்றனர்.

1964 - சோவியத் ஒன்றியம் வஸ்கோத்1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது விண் ஓடமாகும்.

1968 - ஈக்குவட்டோரியல் கினி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1999 - உலகின் மக்கள் தொகை அறுநூறு கோடியை எட்டியது







All the contents on this site are copyrighted ©.