2010-10-09 15:47:45

மாமன்றச் செய்திகளை எபிரேய மொழியில் வழங்க வத்திக்கான் வானொலி திட்டமிட்டுள்ளது


அக்.09,2010. மேலும், இந்த ஆயர் மாமன்றத்தின் நிகழ்வுகள் பற்றி இஸ்ரேல் மக்களுக்கு அறிவிக்கும் நோக்குடன், மாமன்றச் செய்திகளையும் உரைகளையும் எபிரேய மொழியில் மொழி பெயர்த்து வழங்குவதற்கென யூத-கிறிஸ்தவ உறவுகளில் தேர்ந்த வல்லுனர் ஒருவரை அழைத்துள்ளது வத்திக்கான் வானொலி.

யூத-கிறிஸ்தவ உறவுகளுக்கான எருசலேம் மையத்தின் இயக்குனரும் தொடக்ககாலத் திருச்சபை வரலாற்றில் வல்லுனருமான யூதர் Hana Bendcowsky இப்பணிக்கென அழைக்கப்பட்டுள்ளார்.

Bendcowsky மட்டுமே கிறிஸ்தவ மற்றும் யூத வரலாறுகளை முழுமையாகத் தெரிந்துள்ளவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இன்னும், இம்மாமன்றத்தை முன்னிட்டு Tele Lumiere என்ற லெபனன் அரபு மொழிக் கிறிஸ்தவத் தொலைக்காட்சி, ஆங்கிலம், ஸ்பானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், இத்தாலியம் உட்பட பல மொழிகளில் முதன்முறையாக ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.