2010-10-09 15:46:23

மத்திய கிழக்குப் பகுதிக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றம் இஞ்ஞாயிறன்று தொடங்குகிறது


அக்.09,2010. மத்திய கிழக்குப் பகுதிக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தை இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் மாமன்றத் தந்தையருடன் இணைந்து கூட்டுத் திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைக்கிறார் திருத்தந்தை.

ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இத்திருப்பலியில், 167 மாமன்றத் தந்தையர், 79 அருட்பணியாளர்கள் உட்பட 246 பேர் திருத்தந்தையுடன் இணைந்து நிகழ்த்துகின்றனர்.

மத்திய கிழக்குப் பகுதியில் காப்டிக், சிரியன், கிரேக்க-மெல்கித்தே, மாரனைட், கல்தேய, அர்மேனிய ஆகிய ஆறு திருச்சபைகள் கத்தோலிக்கரின் பிரசன்னத்தைக் கொண்டுள்ளன. இத்திருச்சபைகள் ஒவ்வொன்றும் அதனதன் முதுபெரும் தலைவரைக் கொண்டுள்ளன.

16 மத்திய கிழக்குப் பகுதி நாடுகளில் கத்தோலிக்கர் 1.6 விழுக்காட்டினரே என்றாலும் இந்த 57 இலட்சம் கத்தோலிக்கரும் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் ஏழு வெவ்வேறு விதமான மரபுகளைக் கொண்டுள்ளனர்

கீழைரீதி கத்தோலிக்கர் மத்தியில் ஐக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ள இந்த ஆயர் மாமன்றம் இம்மாதம் 24ம் தேதி நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.