2010-10-09 15:44:29

திருத்தந்தை, குரோவேஷியக் குடியரசுத் தலைவர் சந்திப்பு


அக்.09,2010. குரோவேஷியக் குடியரசுத் தலைவர் Ivo Josipovićஐ இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையை 33 நிமிடம் தனியே சந்தித்துப் பேசிய அரசுத்தலைவர் Josipović, இதற்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்.

குரோவேஷியா, போஸ்னியா- எர்செகொவினா ஆகிய பகுதிகளின் இன்றைய நிலைமை, குரோவேஷியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குத் தலத்திருச்சபை ஆற்றி வரும் சேவைகள், ஐரோப்பிய சமுதாய அவையில் முழுவதுமாக இணைவதற்கு அந்நாடு எடுத்து வரும் முயற்சிகள், அச்சமயங்களில் கிறிஸ்தவத் தனித்துவம் காக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்கள் இச்சந்திப்புக்களில் இடம் பெற்றன என்று திருப்பீடம் அறிவித்தது.

2011ம் ஆண்டில் திருத்தந்தை குரோவேஷியக் குடியரசுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளக்கூடும் என்றும் இச்சந்திப்புக்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.