2010-10-09 15:49:55

கிறிஸ்தவர்க்கெதிராக வன்முறை நடத்தப்படுவதற்குத் தெற்கு ஆசியா பொதுவான இடமாக இருக்கிறது


அக்.09,2010. பெரும்பான்மை மதங்களால் கிறிஸ்தவர்க்கெதிராக வன்முறை நடத்தப்படுவதற்குத் தெற்கு ஆசியா பொதுவான இடமாக இருக்கிறது என்று பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது.

PIME என்ற பாப்பிறை மறைபோதக சபையின் சுமார் 70 குருக்களும் அருட்சகோதரிகளும் கலந்து கொண்ட கருத்தரங்கில் கலாச்சாரங்களை நோக்கிய புதிய அணுகுமுறை குறித்து வழிகாட்டப்பட்டது.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானிலும் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவிலும் கிறிஸ்தவர்கள் வாழ வேண்டிய முறைகள் பற்றியும் இதில் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இந்த நான்கு நாள் கருத்தரங்கில் பிற மதத்தவரைப் புரிந்து கொள்வதற்கு உரையாடலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.