2010-10-09 15:51:39

உலக நலவாழ்வு நிறுவனம் – மனநலம் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை


அக்.09,2010. மனச்சோர்வு, மதுப்பழக்கத்தால் ஏற்படும் பலவித மனநிலை பாதிப்புகள், நரம்புத் தளர்ச்சி, காக்காய் வலிப்பு மற்றும்பிற மனநிலை பாதிப்பு சார்ந்த நோய்களுக்கான ஆரம்ப சுகாதார சிகிச்சைகளை எளிதாக்கும் புதிய வழிகாட்டி முறைகளை வெளியிட்டுள்ளது உலக நலவாழ்வு நிறுவனம்.

நூற்றுக்கணக்கான வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சுமார் நூறு பக்க கையேடு இந்நோய்களுக்குச் சிகிச்சை வழங்க உதவும் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்தது.

அக்டோபர் 10, இஞ்ஞாயிறன்று உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு இத்தகவலை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

வளரும் நாடுகளில் வாழும் சுமார் 9 கோடியே 50 இலட்சம் மனத்தளர்ச்சி நோயாளிகள், 2 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட காக்காய் வலிப்பு நோயாளிகள் உட்பட பலவித நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மனநலம் குன்றிய நோயாளிகளில் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்டோருக்கு எவ்வித சிகிச்சையும் கிடைப்பதில்லை என்றும் அந்நிறுவனம் கூறியது







All the contents on this site are copyrighted ©.