2010-10-09 15:48:49

இறந்து கொண்டிருப்போரையும் முதியோரையும் கருணைக் கொலை செய்வது அவர்களுக்கு வழங்கப்படும் எதிர்சிகிச்சை - ஆஸ்திரேலியப் பேராயர்


அக்.09,2010. இறந்து கொண்டிருப்போரையும் முதியோரையும் கருணைக் கொலை செய்வது அவர்களுக்கு வழங்கப்படும் எதிர்சிகிச்சை மற்றும் இந்நடவடிக்கை உண்மையிலேயே அவர்களைக் கைவிடுவதாக இருக்கின்றது என்று ஆஸ்திரேலியப் பேராயர் ஒருவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் கருணைக் கொலைக்கு ஆதரவான முயற்சிகள் அதிகரித்து வருவதையொட்டி கட்டுரைகள் மற்றும் ஒளி-ஒலிப் பதிவுகள் மூலம் பேசிய மெல்பெர்ன் பேராயர் Denis Hart, கருணைக் கொலைக்கு ஆதரவாகப் பேசுவது, மனிதனின் காருண்யப் பண்பைத் தவறான இடத்தில் பயன்படுத்துவதாக இருக்கின்றது என்றார்.

அனைத்துலக வாழ்வதற்கான உரிமைக் கூட்டமைப்பின் 18வது கருத்தரங்கு மெல்பெர்னில் நடைபெற்று வருவதை முன்னிட்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார் பேராயர் Hart.

அக்டோபர் 10, உலக மரணதண்டனை எதிர்ப்பு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.