2010-10-08 16:26:38

வத்திக்கானில் இரண்டு துறைகளுக்குப் புதிய தலைவர்கள்


அக்.08,2010. திருப்பீடத்தின் கோர் ஊனும் (Cor Unum) என்ற பிறரன்பு அவையின் புதிய தலைவராக ஆப்ரிக்க நாட்டுப் பேராயர் இராபர்ட் சாராவையும், குருக்கள் பேராயத்தின் புதிய தலைவராக இத்தாலியப் பேராயர் மவ்ரோ பியாச்சென்சாவையும் நியமித்துள்ளார் திருத்தந்தை

ஆப்ரிக்காவின் Guinea நாட்டு Conakry உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதாகும் பேராயர் சாரா, 2001ம் ஆண்டு முதல் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத்தின் செயலராகப் பணியாற்றி வருகிறார்.

“கோர் ஊனும்” என்ற திருப்பீடத்தின் பிறரன்பு அவையானது திருத்தந்தையின் பெயரால் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகி்றது. மேலும், உலக அளவில் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களின் முயற்சிகளை ஊக்குவித்து ஒருங்கிணைத்து வருகிறது.

குருக்கள் பேராயத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் 66 வயதாகும் பேராயர் பியாச்சென்சா, உலகளாவியக் குருத்துவப் பயிற்சி, குருக்களை உருவாக்குதல், மேய்ப்புப்பணி ஆகியவற்றுக்குப் பொறுப்பாவார். எல்லா நிலையிலுள்ள விசுவாசிகளின் மறைக்கல்விக்கும் இவர் ஏற்றுள்ள பேராயமே பொறுப்பாகும்







All the contents on this site are copyrighted ©.